அரை மணி நேர மழைக்கே வெள்ளக்காடான சென்னை! ஊர்ந்து சென்ற வாகனங்களால் டிராபிக் ஜாம்
Recommended Video

சென்னை: அரை மணி நேர மழைக்கே வெள்ளக்காடாகியது சென்னை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
சென்னையிலும், புற நகர் பகுதிகளிலும், இன்று பிற்பகல் முதல் கன மழை கொட்டியது. சில பகுதிகளில் மிதமாக இருந்த மழை சில பகுதிகளில் நன்கு வெளுத்து வாங்கியது.

இந்த திடீர் கோடை மழையால், சென்னையின், எழும்பூர், அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெள்ளம் ஏற்பட்டது. மழை, வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எழும்பூரில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையிலும் வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபடி சென்றன.
அரை மணி நேரம் பெய்த மழைக்கே சென்னை தத்தளித்தது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலத்திற்கு முன்பே வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த கோடை மழை அரசுக்கு உணர்த்தியுள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications