சித்த முன்ன வந்திருக்கப்படாதா மழை சார்... காலையிலேயே ஏங்கிப் போன ஸ்கூல் பசங்க!
சென்னை: மீண்டும் ஒரு மழை.. வெப்பம் தணித்த ஒரு ஜில் நாள்.. சென்னை மீண்டும் நனைந்து மகிழ்ந்துள்ளது...
வட கிழக்குப் பருவ மழையின் தொடக்கம் இந்த முறை சற்று சிறப்பாகவே இருந்தது. சென்னையில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மழை வெளுத்துக் கொட்டியது.
ஆனால் அதன் பின்னர் மழைக்கு புரமோஷன் கொடுத்து தென் மாவட்டங்களுக்குத் திருப்பி விட்டு விட்டார் வருண பகவான். வட மாவட்டங்களில் குறைந்து போன மழை தென் மாவட்டங்களை புரட்டிப் போட்டது.. தென் மாவட்ட மண்ணைத் துவட்டிப் போட்டது.
இடையில் வட கடலோரத் தமிழகத்தில் லேசாக எட்டிப் பார்த்தது மழை. இன்று மீண்டும் ஒரு மழை.

நீ பெய்.. நான் பேட் செய்கிறேன்
இது சென்னை மெரீனா கடற்கரையில் கண்ட காட்சி. கருத்த மேகங்கள் கொளுத்து நிற்க.. தடித்த பேட் பிடித்து கிரிக்கெட் விளையாடும் ஒரு இளசு இது.

ஓ மேகமே
சென்னையில் பல நாட்களாக மழை இல்லை. மாறாக குளிர் நிலவி வந்தது. அதிகாலையிலும், இரவிலும் நல்ல பனி பெய்து வந்தது.

குளிரை மாற்றிய மழை
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நல்ல காற்று வீசி வந்தது. நேற்று பகலில் நல்ல வெயிலும் அடித்தது. ஆனால் நகரின் சில பகுதிகளில் லேசான தூறலைப் போட்டு விட்டுச் சென்றது.

இரவில் மழை
இந்த நிலையில் நேற்று இரவு நகரின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அதிகாலையில் பல இடங்களை நனைத்துச் சென்றது. பகலில் பல பகுதிகளை பதம் பார்த்தது இந்த கார்த்திகை மழை.

தீபத்தைத் தவற விட்டு
வழக்கமாக பெரிய தீபம் எனப்படும் கார்த்திகை நாளுக்கு முன்பு நல்ல மழை பெய்யும் என்பார்கள். ஆனால் சென்னையில் இந்த முறை மழை இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று பெய்த மழை மக்களின் ஏக்கத்தைத் தீர்த்துச் சென்றுள்ளது.

இப்பப் பார்த்து வந்திருச்சே
இன்று காலை மழை பெய்த நேரம் பல பள்ளிப் பிள்ளைகளைக் கடுப்பாக்கி விட்டது. அதாவது புறப்பட்டு வெளியே போன பிறகு மழை வந்ததால் வேறு வழியில்லாமல் பள்ளிக்குப் போக நேரிட்டு விட்டது பிள்ளைகளுக்கு.

முன்னாடியே வந்திருக்கக் கூடாதா
முன்கூட்டியே வந்திருந்தால் பள்ளிக்கு விடுமுறையாவது கிடைத்திருக்கும் என்பது பல பள்ளிப் பிள்ளைகளின் செம வருத்தமாக இருந்தது.

நனைந்து கொண்டே ஓட்டம்
அலுவலகம் சென்றோர், பள்ளிக் குழந்தைகள் என காலையில் வெளியே கிளம்பியோர் கிட்டத்தட்ட அனைவருமே இந்த திடீர் மழையால் நனைய நேரிட்டு விட்டது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications