Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேத்தி வயது சிறுமியை சீரழித்த முதியவர்.. சென்னை சிறுமி பலாத்கார விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

சென்னை சிறுமி பாலியல் பலாத்கார விவகாரத்தில் 66 வயது முதியவரான லிப்ட் ஆபரேட்டரே முதலில் சிறுமியை பலாத்காரம் செய்தது அம்பலமாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிறுமி பலாத்காரம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு சிறைக்காவல்- வீடியோ

    சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார விவகாரத்தில் 66 வயது முதியவரான லிப்ட் ஆபரேட்டரே முதலில் சிறுமியை பலாத்காரம் செய்தது அம்பலமாகியுள்ளது.

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை அங்கு பணிபுரியும் லிப்ட் ஆபரேட்டர், எலக்ட்ரிஷியன், பிளம்பர் என 15 பேர் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாயார் நேற்று போலீஸில் புகார் அளித்தார்.

    வாய் பேச முடியாத காது கேளாத அந்த சிறுமிக்கு மயக்க ஊசி போட்டும், போதை ஊசி போட்டும் அந்த கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான காலி சிரஞ்சுகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    லிப்ட் ஆபரேட்டர் திட்டம்

    லிப்ட் ஆபரேட்டர் திட்டம்

    11 வயது சிறுமி பள்ளிக்கு போகும்போது லிப்ட்டை பயன்படுத்தியுள்ளார். அப்போது பழக்கமான லிப்ட் ஆபரேட்டர் சிறுமியை பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    66 வயது முதியவர் ரவிக்குமார்

    66 வயது முதியவர் ரவிக்குமார்

    அதன்படி சிறுமி வீட்டில் யாரும் இல்லாத போது அவரை மொட்டைமாடி, லிப்ட், டாய்லேட், ஜிம் என மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சீரழித்துள்ளார். அந்த லிப்ட் ஆபரேட்டருக்கு வயது 66. பெயர் ரவிக்குமார்.

    பேத்தி வயதுடைய சிறுமி

    பேத்தி வயதுடைய சிறுமி

    பேத்தி வயதுடைய அந்த சிறுமியை சின்னாபின்னமாக்கியதோடு அவரை ஆபாசமாக தனது செல்போனில் படம் பிடித்து நினைத்தபோதெல்லாம் வீடியோவை காண்பித்து சிறுமியை சீரழித்துள்ளார்.

    கூட்டாளிகளுக்கும்

    கூட்டாளிகளுக்கும்

    மேலும் அங்கு பணிபுரியும் பிளம்பர் உட்பட தனது சகாக்களிடமும் அந்த வீடியோவை காண்பித்து வக்ரமாக ரசித்த முதியவர் ரவிக்குமார், சிறுமியை வீடியோவை காண்பித்து மிரட்டியும் கொன்று விடுவதாக கத்தி முனையில் மிரட்டியும் கூட்டாளிகளுக்கு விருந்தாக்கியுள்ளார்.

    நீதிபதி விசாரிப்பு

    நீதிபதி விசாரிப்பு

    சிறுமி மறுத்தபோது அவரை கத்தியால் கழுத்தில் கீறியுள்ளனர். அந்த காயமும் சிறுமியின் கழுத்தில் இருந்துள்ளது. இதுதொடர்பாக மகிளா நீதிமன்ற நீதிபதி சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

    தடயவியல் சொதனை

    தடயவியல் சொதனை

    மேலும் சிறுமிக்கு மயக்க மருந்து மற்றும் போதை மருந்து செலுத்த பயன்படுத்தப்பட்ட காலி சிரஞ்சுகளை கைப்பற்றியுள்ள போலீசார் அவற்றை தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

    மரண தண்டனை கோரிக்கை

    மரண தண்டனை கோரிக்கை

    17 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 11 வயதேயான சிறுமி, அதுவும் மாற்றுத்திறனாளி சிறுமி என்ற இரக்கம் கூட இல்லாமல் இந்த காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+