சென்னையில் ஜில் மழை… ஈரோடு, திருப்பூரில் இடி மின்னல் மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் காலைமுதலே சாரல் மழை பெய்து வருவதால் வெப்பம் மறைந்து குளுமை பரவியுள்ளது. சட்டென்று மாறிய வானிலையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வளிமண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அக்னிநட்சத்திரம் ஆரம்பித்து 9 நாட்களுக்குப் பின்னர் தற்போதுதான் சென்னைவாசிகள் மழையை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் சாரல்

சென்னையில் சாரல்

சென்னையில் காலை முதலே வானம் மெகா மூட்டத்துடன் காணப்படுகிறது. திருவல்லிக்கேணி,மெரினா கடற்கரை, மயிலாப்பூர், பட்டினப்பாக்கத்தில் சாரல் மழை பெய்து வருகிறது.

பரவிய குளுமை

பரவிய குளுமை

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நாள்முதலே சென்னையில் வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாகவே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இன்று காலை முதலே பெய்துவரும் சாரல் மழையால் குளுமை பரவியுள்ளது.

ஈரோடு - திருப்பூரில்

ஈரோடு - திருப்பூரில்

அரைமணி நேரமாக ஈரோடு, சித்தோடு சோலார் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்திலும் கன மழை பெய்கிறது.

உதகையில் மழை

உதகையில் மழை

உதகை, குன்னூர், கோத்தகிரியில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சீசனை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில், இலங்கை அருகே ஏற்பட்டுள்ள, மேல் அடுக்கு காற்று சுழற்சியால், தென் மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் மழை

தென் தமிழகத்தில் மழை

தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், மழை பெய்யலாம். சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மழை அல்லது இடியுடன் கூடிய மழை, ஒரு சில இடங்களில் பெய்ய வாய்ப்பு உண்டு. வெப்பம், 35 மற்றும், 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக் கூடும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+