மதுபான கடைகளை எப்படி மூடபோறீங்க... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
மதுபானக் கடைகளை மூட அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விளக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: மதுபானக் கடைகளை மூட அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விளக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற்ம கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி சென்னை திருமுல்லைவாயில் உள்ள டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த 21 பேரும் ஜாமீன் கோரி கீழ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பிரசன்னா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் மனுவை கீழ் நீதிமன்றம் தள்ளுப்படி செய்தது. பிரச்சன்னா தாயார் இறந்து விட்டதால் அவரை பரோலில் விடுவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கிருபாகரன், பார்த்தீபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிட்டனர்.அப்போது டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரசன்னா உள்ளிட்ட 21 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டும், அவர்களின் மீதான வழக்குகளை ரத்து செய்தும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை சிறைத் துறையினர் மதிக்காததால் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் இன்று கூறியதாவது: எத்தனை டாஸ்மாக் கடைகள் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டன. குடியிருப்புப் பகுதிகளில் எத்தனை கடைகள் தொடங்கப்பட்டன. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டதா என்பன உள்ளிட்ட சரமாரியான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
மேலும் அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று கூறியுள்ளனர். அப்படி எனில் அடுக்க கட்டமாக எத்தனை கடைகளை தமிழக அரசு மூடப்போகிறது. 500 கடைகளா அல்லது 1000 கடைகளா. அடுத்த கட்டமாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது குறித்து கேள்விகளுக்கு ஜூன் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications