இயக்குநர் கவுதமனை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இயக்குநர் கவுதமனை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: இயக்குநர் கவுதமனை நிபந்தனை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் கொதிப்பில் இருந்து வந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏப்ரல் 10ம் தேதி சென்னையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர்.

காவிரி பிரச்சினையை மறக்கடிக்கவே இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து அதையும் மீறி போட்டிகள் நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்ததால் போராட்டம் வெடித்தது. அண்ணா சாலை முழுவதும் மக்கள் எழுச்சியுடன் குவிந்தனர்.
இதில் பாரதிராஜா, சீமான், அமீர், கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கடந்த ஜூன் 24-ஆம் தேதி திருவல்லிக்கேணி போலீஸார் இயக்குநர் கவுதமனை திடீரென கைது செய்தனர்.
இதையடுத்து இயக்குநர் கவுதமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விசாரித்தார். அரியலூரில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தையுடன் கவுதமனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
-
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
நீதிபதிகள் புனித பசுக்கள் இல்லை.. நீதித்துறையில் ஊழல் இல்லைனு சொல்ல முடியாது – சென்னை ஹைகோர்ட் -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications