பேரவையில் ஜெ.படம் வேண்டாம் என மக்கள் நினைத்தால் அது தேர்தலில் எதிரொலிக்கும்- ஹைகோர்ட் அதிரடி
பேரவையில் ஜெயலலிதா படம் வேண்டாம் என மக்கள் நினைத்தால் அது தேர்தலில் எதிரொலிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
Recommended Video

சென்னை: சட்டசபையில் ஜெலலிதா படம் வைக்க வேண்டாம் என மக்கள் நினைத்தால் அதன் முடிவு தேர்தலில் எதிரொலிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் படம் சட்டசபையில் கடந்தசில நாட்களுக்கு முன்பு நிறுவப்பட்டது. அவர் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்துவிட்டதால் அவரது படத்தை வைக்கக் கூடாது என்று திமுக எதிர்ப்பு தெரிவித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்...
இந்த எதிர்ப்பையும் மீறி அவரது படத்தை சபாநாயகர் திறந்து வைத்தார். இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முடிவு எதிரொலிக்கும்
அந்த வழக்கானது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், ஜெ.படத்தை வைக்க வேண்டாம் என மக்கள் நினைத்தால் அதை தேர்தலில் அதன் முடிவு எதிரொலிக்கும்.

நீதிமன்றம் தலையிட முடியாது
தேர்தலுக்கு பின்னர் பொறுப்பேற்கும் சபாநாயகர் அந்த படத்தை அகற்றுவது குறித்து முடிவு எடுப்பார். தற்போதைய சபாநாயகரின் அதிகார வரம்பிற்குள் நீதிமன்றம் தலையிட முடியாது, அது சரியாகவும் இருக்காது.

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்
தனி மனித உரிமையில் பாதிப்பு ஏற்படும்படியாக சபாநாயகர் முடிவு இருந்தால் மட்டுமே நீதிமன்றம் அதில் தலையிடும். 18 எம்எல்ஏக்களின் தகுதிநீக்க விவகாரம் தனி மனித உரிமை தொடர்பானது என்பதாலேயே நீதிமன்றம் தலையிட்டது என்றார் தலைமை நீதிபதி.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications