எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பள்ளிக் குழந்தைகளை அழைத்து செல்ல ஹைகோர்ட் தடை
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பள்ளிக் குழந்தைகளை அழைத்து செல்ல தடை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பள்ளிக் குழந்தைகளை அழைத்து செல்ல சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எம்ஜிஆரின் நூற்றாண்டு கடந்த ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டம் சேர்க்க..
முதல்வர், துணை முதல்வர் கலந்து கொள்ளும் விழாக்களில் கூட்டத்தை சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், அங்குள்ள நாற்காலிகளை நிரப்புவதற்காகவும் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உணவில்லாமல்
அவ்வாறு பயன்படுத்தப்படும் மாணவர்கள் காலை முதல் மாலை வரை உணவு கூட அளிக்காமல் உட்கார வைக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சேலத்தில் வரும் 30-ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்களை பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று மாற்றம் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆசிரியர் மீது மட்டும் நடவடிக்கை
அந்த வழக்கில், அரசு விழாக்களுக்கு குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது தீவிபத்து, நெரிசல், பாலியல் தொல்லை, காணாமல் போவது உள்ளிட்டவை நடந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆட்சியர் மீதோ, அரசியல்வாதிகள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மேலும் குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் வழிமுறைகளை வகுக்கும் வரை மாணவர்களை வெளியே அழைத்து செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தடை விதிப்பு
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது நீதிபதிகள், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல தடை விதித்தனர். மேலும் இந்த வழக்கு முடியும் வரை குழந்தைகளை எந்தவிதமாக அரசுவிழாக்களும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications