மிரட்டும் கொரோனா.. சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் காணொலி விசாரணை.. ஏப்ரல் 10 முதல் துவக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 10ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெற உள்ளது.
இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு உள்பட குறிப்பிட்ட சில மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது மெல்ல மெல்ல உயர தொடங்கி உள்ளது. இதனால் மத்திய அரசு பல்வேறு வழிக்காட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தான் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் அனைத்து மாநில அரசுகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இது ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொது இடங்களிலும் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வலியுறுத்தி வருகிறார்.
மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளை தனிமைப்படுத்தும் நோக்கில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் துவங்கியுள்ளது. இதன்மூலம் மக்களை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் களத்தில் இறங்கி உள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த எண்ணிக்கை நேற்று அதிகரித்தது.
நேற்று மாலை தமிழ்நாடு அரசு வெளியிட்ட புல்லட்டின்படி பார்த்தால் தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 273 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 28 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,366 ஆக உள்ளது.

இதற்கிடையே தான் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு வழக்கு விசாரணையை காணொலி காட்சி மூலம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் 10ம் தேதி முதல் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில் நீதிமன்றத்தில் நேரடியாகவும் வழக்கு விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் விசாரணை நடைபெற உள்ளது. காணொலி வழி விசாரணையை வழக்கறிஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் கேட்டு கொண்டுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications