அமித்ஷாவை வரவேற்று சென்னை முழுக்க பேனர்கள்.. பொது மக்களுக்கு இடையூறு! தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைவர் அமித்ஷாவை வரவேற்று சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறாக பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல் பற்றி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த, தமிழகம் வந்துள்ளார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா. இதையொட்டி, சென்னை விமான நிலையம் முதல் சாந்தோம் வரை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

Chennai High court instruct Tamilnadu government to look in to the illegal banners

இதை கவனித்த சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரை அழைத்து விளக்கம் கேட்டுள்ளார். பொதுமக்களுக்கு இடையூறாக பல இடங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அப்போது சுட்டி காட்டினார்.
விதியை மீறி பேனர் வைக்கப்டுவதை அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் தலைமை வழக்கறிஞரிடம், தலைமை நீதிபதி வலியுறுத்தினார்.

அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.

பல்வேறு இடங்களில் நடைபாதைகளை உடைத்து பாஜக சார்பில் அமித்ஷாவை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக சோஷியல் மீடியாவில், மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+