For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினகரன், தமிழ்முரசு நாளேடுகளுக்கு விளம்பரம் தர தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு

தினகரன் தமிழ்முரசு நாளேடுகளுக்கு விளம்பரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை தினகரன், தமிழ்முரசு நாளேடுகளுக்கு விளம்பரம் தர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் ஏன் விளம்பரம் தரவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2011ஆம் சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைத்தது. அதன் பிறகு திமுக ஆதரவு நாளேடுகளான தினகரன் மற்றும் தமிழ் முரசு நாளேடுகளுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அரசு விளம்பரங்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

Chennai high cour

இதையடுத்து கலாநிதிமாறனுக்கு சொந்தமான தினகரன் நாளேடு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி தினகரன், தமிழ் முரசு நாளேடுகளுக்கு விளம்பரம் தர உத்தரவிட்டார். மேலும் 2011 முதல் ஏன் விளம்பரம் தரவில்லை என தமிழக அரசுக்கு நீதிபதி துரைசாமி கேள்வி எழுப்பினார்.

English summary
Chennai high court orders Tamilnadu govt to give adds to Dinakaran and Tamilmurasu dailies. And Judge asked govt that why did not give adds from 2011?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X