சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை அடியோடு மாற்ற வேண்டும்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ஷெனாய் நகரில் மாநகராட்சியின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழையும் பெற முடியாத நிலை உள்ளது என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
மேலும், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை தடுக்க சென்னை மாநகராட்சியிடம் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆக்ரமிப்புகளைத் தடுக்க கடும் நடவடிக்கைள் எடுக்க வேண்டும் என்றும் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

அடுக்கடுக்கான கேள்வி
சென்னை மாநகராட்சியில் இருக்கும் ஊழல் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? சென்னை மாநகராட்சியின் ஊழல் கண்காணிப்புக் குழுவின் பணி என்ன? என்றும் மாநகராட்சிக்குள்ளும் மாநகராட்சிப் பகுதிக்கு உள்ளேயும் லஞ்சத்தை ஒழிக்க எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது சென்னை உயர்நீதிமன்றம்.

நடவடிக்கைகள் என்ன?
மக்களுக்கான பணிகளை செய்வதற்காக லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஊழல் தொடர்பான புகார்கள் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

அதிரடி தீர்ப்பு
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

புதிய அதிகாரிகள்
தமிழக டிஜிபியுடன் கலந்து ஆலோசித்து புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதிகாரிகளை இடமாற்றம் செய்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனிப்பிரிவு - உத்தரவு
அதிகாரிகளின் சொத்து கணக்கை ஆய்வு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் அனைத்து அலுவலகங்களிலும் ஊழல் கண்காணிப்பு தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்.

சிசிடிவி கேமராக்கள்
அனைத்து ஊழல் கண்காணிப்பு தனிபிரிவிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். யார் யார் புகார் தருகிறார்கள் என்பதை பதிவு செய்யும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.

வரவேற்பறை அருகில்
மேலும் மாநகராட்சியின் வரவேற்பறை அருகிலேயே லஞ்ச ஒழிப்பு பிரிவை அமைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications