தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம்!
தென் தமிழகம், தமிழக வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : காற்றழுத் தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அவ்வபோதும் தென் தமிழகம், வடதமிழகத்தில் பரவலாகவும் மழை பெய்துள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன் அறிவிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் ஒட்டியுள்ள பகுதிகளில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்னர் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னையைப் பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடங்களில் மாலை, இரவு நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆனைக்காரன்சத்திரத்தில் 6 சென்டிமீட்டர் மழையும், கடலூர் சீர்காழியில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications