சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், நீண்ட விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்பட்டன. வெள்ளத்தில், மாணவர்கள் சீருடைகளை தொலைத்திருந்தால், சீருடை அணிந்து வர கட்டாயப்படுத்த வேண்டாம் என, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் கடந்த மாதம் 9ந்தேதி முதல் 25ந்தேதி வரை ஒவ்வொரு நாளாக விடுமுறை அறிவிப்புகள் வந்து பள்ளிகள் மூடப்பட்டன. 26, 27, 28ந்தேதிகளில் பள்ளி, கல்லுரிகள் நடைபெற்ற நிலையில் மீண்டும் பெய்த மழை ஏற்படுத்திய பாதிப்பால் 29ந்தேதி தொடங்கிய விடுமுறை 15 நாட்களாக டிசம்பர் 13ம் வரை நீடித்தது.

Chennai, kanchi, Tiruvallur: Schools re-open today

33 நாட்கள் விடுமுறை

வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர். இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. கடந்த மாதமும் இந்த மாதமும் சேர்த்து மொத்தம் 33 நாட்கள் மழையால் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் மாணவர்களின் கல்வித் திட்டங்களில் பெரும் தொய்வு ஏற்பட்டது.

29 பள்ளிகளுக்கு விடுமுறை

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை (டிச.14) முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் வகையில் தூய்மைப்படுத்தும் பணிகள், ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை மாவட்டத்தில் 29 பள்ளிகளைத் தவிர மீதமுள்ள பள்ளிகள் அனைத்தும் திங்கள்கிழமை வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்தார்.

மாணவர்களுக்கு கவுன்சிலிங்

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு இன்று திரும்புகின்றனர். வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாமுக்கும், வெள்ளப் பாதிப்பிலிருந்துநீங்கி, புத்துணர்ச்சி பெற, 'கவுன்சிலிங்' வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீருடை கட்டாயமல்ல

வெள்ளத்தில், மாணவர்கள் சீருடைகளை தொலைத்திருந்தால், சீருடை அணிந்து வர கட்டாயப்படுத்த வேண்டாம் என, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட பள்ளி

சென்னையில், வெள்ளத்தால் உருக்குலைந்து போன அசோக் நகர் பள்ளியை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வீரமணி மற்றும் துறையின் முதன்மை செயலர் சபிதா பார்வையிட்டனர். வெள்ளச் சேதம் பற்றி கவலைப்படாமல், இருக்கும் கட்டமைப்பை பயன்படுத்தி, பாடங்களை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர்.

இன்று விடுமுறை விடப்பட்ட 29 பள்ளிகள்

அரசுப் பள்ளிகள்: அரசு மேல்நிலைப் பள்ளி, சிட்கோநகர், வில்லிவாக்கம், சென்னை.
அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.
அரசு உதவிப்பெறும் பள்ளிகள்:
ஒய்.எம்.சி.ஏ. காலேஜ் ஸ்போர்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி, நந்தனம், சென்னை.
அரசு உதவிப்பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகள்: அம்பத்தூர் அரிமா சங்கம் நடுநிலைப் பள்ளி, இராஜாமன்னார் சாலை, சாலிகிராமம், சென்னை லயன்ஸ் கிளப் தொடக்கப் பள்ளி, கிண்டி, சென்னை.
திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.
புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளி, ஆயிரம் விளக்கு, சென்னை.
சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி, ஆயிரம் விளக்கு, சென்னை.
சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளி, சைதப்பேட்டை, சென்னை.
புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளி, சின்னமலை, சென்னை.
சென்னை பள்ளிகள்: சென்னை தொடக்கப் பள்ளி, அம்மையம்மாள் தெரு, புளியந்தோப்பு , சென்னை.
சென்னை உயர்நிலைப் பள்ளி, அம்மையம்மாள் தெரு, புளியந்தோப்பு , சென்னை.
சென்னை நடுநிலைப் பள்ளி, மாடல் பள்ளி, ஆயிரம் விளக்கு, சென்னை.
சென்னை உயர்நிலைப் பள்ளி, 10, ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை.
சென்னை தொடக்கப் பள்ளி, பஜார் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை.
சென்னை தொடக்கப் பள்ளி, 10, ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை.
சென்னை மேல்நிலைப் பள்ளி, சி.ஐ.டி. நகர், நந்தனம், சென்னை.
சென்னை தொடக்கப் பள்ளி, சி.ஐ.டி. நகர், நந்தனம், சென்னை.
சென்னை உருது தொடக்கப்பள்ளி, பஜார் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை.
சென்னை நடுநிலைப் பள்ளி, திடீர் நகர், சைதாப்பேட்டை, சென்னை.
சென்னை மேல்நிலைப் பள்ளி, புலியூர், வடபழனி, சென்னை.
சென்னை தொடக்கப் பள்ளி, புலியூர், வடபழனி, சென்னை.
சென்னை மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.
சென்னை தொடக்கப் பள்ளி, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை.
சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.
சென்னை தொடக்கப் பள்ளி, காமராஜர் நிழற்சாலை, அடையாறு, சென்னை.
சென்னை உயர்நிலைப் பள்ளி, காமராஜர் நிழற்சாலை, அடையாறு, சென்னை.
சென்னை மேல்நிலைப் பள்ளி, தரமணி, சென்னை.
சென்னை தொடக்கப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+