சென்னை கொருக்குப்பேட்டையில் வயதான தம்பதி தற்கொலை... போலீஸாருக்கு உருக்கமான கடிதம்!
சென்னை கொருக்குப்பேட்டையில் தாங்க முடியாத உடல்நிலை கோளாறுகளால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர்.
சென்னை: சென்னை கொருக்குபேட்டையில் கவனிக்க ஆளின்றியும் நோயால் அவதிப்பட்டும் வந்த வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொருக்குப்பேட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம் (75). இவரது மனைவி கிருஷ்ணவேணி (65). இவர்களுக்கு ஆனந்தகுமார் என்ற மகனும், ஜானகி என்ற மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி வண்டலூரிலும், விழுப்புரத்திலும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சண்முகம்- கிருஷ்ணவேணி தம்பதி இன்று அவர்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர். தகவலறிந்த ஆர்.கே. நகர் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது தற்கொலைக்கான கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தை சண்முகம் தன் கைப்பட போலீஸாருக்கு எழுதியிருந்தது தெரியவந்தது. அதில் எனக்கு இதய நோயும், எனது மனைவிக்கு சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக கோளாறும் இருந்தது.
இவற்றை எங்களால் தாங்க முடியவில்லை. அதனால் நாங்கள் இருவரும் சம்மதப்பட்டுதான் இந்த முடிவை எடுத்தோம். எங்கள் மகன் எங்களை நன்றாக வைத்திருந்தான். எங்கள் இஷ்டப்படி நடந்து கொண்டான். எனவே எங்கள் தற்கொலையை காரணம் காட்டி எனது மகனுக்கு தொந்தரவுகளை கொடுக்காதீர்.
நானும் எனது மனைவியும் சேர்ந்து எடுத்த முடிவால் எனது மகனை ஒன்றும் செய்யாதீர்கள். இவ்வாறு அந்த தற்கொலை கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாகவும் கடிதத்தில் இருவரும் கையெழுத்திட்டிருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்!












Click it and Unblock the Notifications