பொங்கல் பண்டிகை: சென்னை – கோவை பிரீமியம் சிறப்பு ரயில்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை, கோவை இடையே பிரீமியம் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
பிரீமியம் சிறப்பு விரைவு ரயில் (00609) வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.50-க்குப்புறப்பட்டு, மறுநாள் காலை 5.10-க்கு கோவையை அடையும்.
இதே போல, கோவையில் இருந்து வருகிற 14, 15 ஆகிய தேதிகளில் காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (06017) மாலை 5.35-க்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இதற்கான முன்பதிவு இன்று (8-ம் தேதி) தொடங்குகிறது.

கூடுதல் பெட்டிகள்
அதேபோல, சென்னை எழும்பூர்- தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் உழவன் விரைவு ரயில்களிலும் தற்காலிகமாக 9-ம் தேதி முதல் 17-ஆம்தேதி வரையிலும் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்படும்.

பொள்ளாச்சி வரை நீடிப்பு
இதனிடையே தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா நேற்று காலை சேலம் ரயில்வே கோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாட்டில் மிக தூய்மையான ரயில்வே நிலையங்களில் சேலம், ஈரோடு, கோவை ரயில் நிலையங்கள் உள்ளன. மக்களின் ஒத்துழைப்பே இதற்கு காரணம். சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, கோவை ஜங்ஷன் வழியாக ரயில்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அகல ரயில்பாதை
பழநி - பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் வரும் 9ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து பழநி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பொள்ளாச்சி வரை நீடிக்கப்படும்.

பழனி – திருச்செந்தூர்
மேலும், மதுரை - பழநி, திருச்செந்தூர் - பழநி ரயில்களை பொள்ளாச்சி வரை நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து திருச்சிக்கு ரயில் இயக்க நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்யும். மேட்டூர் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்புப் பணி முடிக்கப்பட்டு, ரயில் இயக்கப்படும்.

ஊட்டி மலைரயில்
ஊட்டி மலையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதால் தண்டவாளத்தில் பாறைகள் விழுவதால் ரயில் போக்குரவத்து தடை செய்யப்படுகிறது. ஊட்டி மலைப்பாதையில் ரயில் வழி தடத்தில் நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மண், பாறை சரிவுகளை தடுப்பதற்கான ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications