சென்னையில் மேலும் 200 அம்மா உணவகங்கள்: மேயர் சைதை துரைசாமி
சென்னை: சென்னையில் மேலும் 200 அம்மா உணவகங்கள் தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.
இது தொடர்பாக சென்னை மாமன்ற கூட்டத்தில் அவர் வெளியிட்ட அறிவிப்பில், ஒரு வார்டுக்கு ஒன்று வீதம் 200 உணவகங்களும், அது தவிர ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, மற்றும் எழும்பூர் அரசு மருத்துவமனை ஆகியவற்றிலும் அம்மா உணவகங்கள் இருக்கின்றன.

தற்போது ஒவ்வொரு வார்டிலும் மேலும் ஒரு அம்மா உணவகம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதே போன்று, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனை மற்றும் கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலும் அம்மா உணவகம் அமைப்பதற்கான உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே 203 அம்மா உணவகங்கள் உள்ளன. தற்போது மேலும் 200 அம்மா உணவகங்கள் தொடங்கப் படஉள்ளது.
அம்மா உணவகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக 2,400 பேரும், சுவர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 2,436 பேரும் பணிபுரிந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications