இன்று இரவு இடியுடன் மழை பெய்யலாம்.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் இரண்டு நாட்களுக்கு முன்பு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவானது. அது பின்னர் வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறியது. இதன் காரணமாக தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல தமிழக கடலோரப் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டிய கடலோரப் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு நேரங்களில் இடியுடன் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். நகரின் சில இடங்களில் கனமழை பெய்யும்.
புதுச்சேரியில் பெரும்பாலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழை பெய்யும். பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications