அடடா மழைடா.. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Chennai meterological department said that chance for Rain in 12 districts in Tamilnadu 31-05-23

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஜூன் 2 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 3 மற்றும் 4 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் வேப்பூர் (கடலூர்) 9, காட்டுமயிலூர் (கடலூர்) 8, கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 7, கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 6, மூலனூர் (திருப்பூர்), பெலாந்துறை (கடலூர்) தலா 5, துறையூர் (திருச்சி), அவலூர்பேட்டை (விழுப்புரம்), செஞ்சி (விழுப்புரம்), துவாக்குடி (திருச்சி) தலா 4, பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), சிறுகுடி (திருச்சி), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), லால்குடி (திருச்சி), சமயபுரம் (திருச்சி), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி) தலா 3, கல்லணை (தஞ்சாவூர்), நல்லதங்காள் நீர்த்தேக்கம் (திருப்பூர்), திருச்சி விமான நிலையம் (திருச்சி), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), ராசிபுரம் (நாமக்கல்), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பூர், கெலவரப்பள்ளி (கிருஷ்ணகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), திருப்பூர், நெடுங்கல் (கிருஷ்ணகிரி), அன்னூர் (கோயம்புத்தூர்) தலா 2, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), எட்டயபுரம் (தூத்துக்குடி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), பூண்டி (திருவள்ளூர்), வளத்தி (விழுப்புரம்), தாராபுரம் (திருப்பூர்), கோத்தகிரி (நீலகிரி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), அரவக்குறிச்சி (கரூர்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), சிவகாசி (விருதுநகர்), ஹரூர் (தருமபுரி), செம்மேடு (விழுப்புரம்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பெரம்பலூர், சாத்தான்குளம் (தூத்துக்குடி), சின்கோனா (கோயம்புத்தூர்), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), பேரையூர் (மதுரை), கிருஷ்ணகிரி, பொன்மலை (திருச்சி), தென்பரநாடு (திருச்சி), வல்லம் (விழுப்புரம்), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), திருத்தணி PTO (திருவள்ளூர்), காட்பாடி (வேலூர்), மடத்துக்குளம் (திருப்பூர்), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சி), கொரட்டூர் (திருவள்ளூர்), வேலூர், குடியாத்தம் (வேலூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), திருச்சி டவுன் (திருச்சி), கிளென்மார்கன் (நீலகிரி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) தலா 1 சென்டிமீட்டரில் மழை அளவு பதிவாகியுள்ளது.

Chennai meterological department said that chance for Rain in 12 districts in Tamilnadu 31-05-23

இன்றும் நாளையும் தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஜூன் 2 ஆம் தேதி தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஜூன் 3 மற்றும் 4 தேதி தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், இலட்சதீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+