முடிவுக்கு வந்த பிரச்சனை.. குடிநீர் விநியோக லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்.. இன்று வழக்கம்போல் இயங்கும்!
சென்னை : சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகள் இன்று வழக்கம் போல் இயக்கும் என தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ குடிநீர் விநியோகிக்கும் லாரிகளின் உரிமையாளர்கள் நேற்று திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் கோடம்பாக்கம், தியாகராய நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

ஏற்கனவே மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்களாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் விநியோகம் செய்யும் லாரிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்கவில்லை என கூறி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தென் சென்னை முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் இரண்டு தண்ணீர் நிரப்பும் நிலையங்களில் ஒரு நிலையம் கடந்த ஒரு மாத காலமாக பழுதடைந்துள்ளது. இதனை சரி செய்யாததால் லாரிகளுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.

இதனிடையே, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் அளித்த விளக்கத்தில் "பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதில் எந்த விதமான பாதிப்பும் இல்லை. சென்னை குடிநீர் வாரியத்திற்கு ஓடும் 428 லாரிகளில் 42 லாரிகள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் குடிநீர் வாரிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாகவும், இன்று வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications