சென்னையில் மழை நிலவரம் எப்படி?... வானிலை மைய அப்டேட்!
தமிழகம் முழுவதும் நாளை முதல் மழையின் அளவு படிப்படியாகக் குறையும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
Recommended Video

சென்னை : தமிழகம் முழுவதும் நாளை முதல் மழையின் அளவு படிப்படியாகக் குறையும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது : கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதி முதல்4 நாட்களாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்றுவலுப்பெற்று தொடர்ந்து அதே இடத்தில் நிலைபெற்று வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு அடுத்த 2 நாட்களில் வடதிசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு குறையக்கூடும்.
அடுத்த 2 தினங்களைப் பொருத்தவரையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பொன்னேரி, நுங்கம்பாக்கம், மாதவரத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை டிஜிபி ஆபீஸ், கொளப்பாக்கம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் 4 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications