சென்னையில் பயங்கரம்... சிறுமிக்கு மது, கஞ்சா கொடுத்து தொடர் பலாத்காரம்
சென்னையில் 10 -ஆம் வகுப்பு சிறுமிக்கு மது, போதை மருந்துகள் கொடுக்கப்பட்டு தொடர் பலாத்காரம் செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: சென்னையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு மது, கஞ்சா கொடுத்து தொடர்ந்து பலாத்காரம் செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, அவர் வசிக்கும் அக்கம்பக்கம் வீட்டு இளைஞர்களுடன் நட்பு ரீதியில் பழகி வந்தார். இந்நிலையில் அவருக்கு மது, கஞ்சா கொடுத்து அந்த இளைஞர்கள் பழக்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியை திருவள்ளூருக்கு அவரது பெற்றோருக்கு தெரியாமல் அழைத்து சென்றனர். அங்கு ஓரிடத்தில் அடைத்து வைத்து சிறுமியை 7 இளைஞர்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்தனர்.

கஞ்சா கொடுத்து
அண்மையில் அந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மது, கஞ்சா எடுத்துக் கொண்டதை சிறுமி ஒப்புக் கொண்டார்.

7 பேரிடம் விசாரணை
இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியிடம் மேலும் விசாரித்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை கூறினார். இதுதொடர்பாக சிறுமி அளித்த புகாரின்பேரில் போலீஸார் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலாத்காரம் செய்தது
பிடிப்பட்டவர்கள் அனைவரும் 18 வயதே நிரம்பிய இளைஞர்கள் ஆவர். மேலும் 5 பேரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்தபோது அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமி கூறியதாகவும் தெரிகிறது.

பரபரப்பு
இதையடுத்து 7 பேரை கைது செய்ததாகவும், விசாரணை மேலும் நடைபெற்று வருகிறது என்றும் மற்ற தகவல்கள் கூறுகின்றன. கஞ்சா, மது கொடுத்து சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications