சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத்.. இந்த மாற்றத்தை நோட் பண்ணீங்களா.. கோவில்பட்டி மக்கள் செம ஹேப்பி
சென்னை: வந்தே பாரத் ரயில்களுக்கு நமது நாட்டில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், இப்போது சென்னை- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கோவில்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் கோவில்பட்டியிலும் நின்று செல்லும் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் இப்போது வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு ரூட்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் நிலையில், பல புது ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலில் சென்னை- கோவை இடையே வந்தே பாரத் இயக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு மெல்லப் பல ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டன.
வந்தே பாரத்: அதன்படி கடந்தாண்டு செப். மாதம் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி இந்த வந்தே பாரத் ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நெல்லையில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு சென்னைக்கு மதியம் 1.50 மணிக்கு ரயில் வந்தடையும். மறுமார்க்கமாக பிற்பகல் 2.50 மணிக்கு எழும்பூரில் புறப்படும் வந்தே பாரத் இரவு 10.40க்கு நெல்லை சென்றடையும்.
செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரம் ஆறு நாட்களுக்கு இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. எழும்பூரில் புறப்படும் இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது. நெல்லையிலிருந்து சென்னை செல்லும் இந்த ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்றும் இதன் மூலம் தினசரி குறைந்தது 50+ பயணிகள் பயனடைவார்கள் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கை: அதைத் தொடர்ந்து சென்னை- நாகர்கோவில் இடையே முதலில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்ட போதும் கோவில்பட்டியில் ரயில் நிறுத்தம் இல்லை. இதனால் பல்வேறு தரப்பினரும் கோயில்பட்டியில் வந்தே பாரத் நிறுத்தம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக, தூத்துக்குடி கோவில்பட்டி ரயில் நியூஸ் என்ற வாட்ஸ்அப் குழுவினர் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளனர். ரயில்வே துறைக்கு மனு தருவது தொடங்கிப் பல தொடர் முயற்சிகளை எடுத்துள்ளனர்.
இதற்கிடையே சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் இப்போது தினசரி வந்தே பாரத் ரயிலாக இயக்கப்படுகிறது. இதைப் பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார். 16 பெட்டிகளைக் கொண்ட இந்த வந்தே பாரத் ரயில் எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்குப் புறப்படும். நாகர்கோவிலுக்கு பிற்பகல் 1.50 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் இது இரவு 11 மணிக்குச் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.
மாற்றம்: இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஆக. 31ம் தேதி இந்த ரூட்டில் முதலில் வந்தே பாரத் இயக்கப்பட்ட நிலையில், அப்போது தூத்துக்குடி கோவில்பட்டி ரயில் நியூஸ் என்ற வாட்ஸ்அப் குழுவினர் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வரவேற்பு கொடுத்தனர்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications