கமல்ஹாசன் மீது எந்த நேரத்திலும் வழக்கு பதிவு- அரசு வக்கீலுடன் போலீஸ் மும்முர ஆலோசனை!
சென்னை: நிலவேம்பு குடிநீர் விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து அரசு வழக்கறிஞருடன் சென்னை போலீசார் ஆலோசனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசனும் தமது நற்பணி மன்றம் மூலம் நிலவேம்பு குடிநீர் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பின்னர் திடீரென நிலவேம்பு குடிநீர் தருவதை நிறுத்துமாறும் நிலவேம்பு தொடர்பான ஆராய்ச்சி தேவை எனவும் கமல்ஹாசன் ட்வீட் போட்டிருந்தார். கமல்ஹாசனின் இந்த ட்வீட் பெரும் சர்ச்சையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து நிலவேம்பு குடிநீர் குறித்து தவறான தகவலை வெளியிட்ட நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கமல் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யலாம் என அதிரடி உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து அரசு வழக்கறிஞருடன் சென்னை போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சட்ட வல்லுநர்களுடனும் சென்னை சைபர் கிரைம் போலீசார் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் கமல்ஹாசன் மீது சென்னை போலீஸ் வழக்குப் பதிவு செய்யக் கூடும் என தெரிகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications