ஆந்திராவை தாக்கியது ஹெலன்.. 7 பேர் பலி- சென்னை, புதுவையில் மழை!!
மசூலிப்பட்டினம்: ஹெலன் புயல் ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டினத்தை இன்று பகல் 1 மணியளவில் தாக்கியது. இந்த புயலுக்கு ஆந்திராவில் தாசில்தார் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.
வங்கக் கடலில் உருவான ஹெலன் புயல் தீவிரமடைந்து ஆந்திர மாநிலம் மசூலிபட்டினம் பகுதியில் மையம் கொண்டிருந்தது. இப்புயல் இன்று பகல் 1 மணியளவில் மணிக்கு 90 கிமீ வேக சூறாவாளி காற்றுடன் கரையைக் கடந்தது. அப்போது கிருஷ்ணா உள்ளிட்ட ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

இந்த ஹெலன் புயலுக்கு ஆந்திராவில் தாசில்தார் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஹெலன் புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் சில பகுதிகளிலும் புதுவையிலும் மழை பெய்தது.
புதுச்சேரியில் அதிகாலை முதலே விட்டு விட்டு கன மழை பெய்தது. குளிர்ச்சியான காற்றும் வீசியதால் புதுச்சேரியே ஏசி போட்டு விட்டது போல இருந்தது.
புதுவை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.












Click it and Unblock the Notifications