நிவாரண பணிகளுக்காக படகுகள், மருத்துவ உபகரகணங்களுடன் சென்னை வந்தது "ஐராவத்" போர்க்கப்பல்
சென்னை: வெள்ளத்தால் மூழ்கியுள்ள சென்னையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக கடற்படையின் ஐராவத் போர்க்கப்பல் படகுகள், மருத்துவ உபகரணங்களுடன் நேற்று சென்னை துறைமுகம் வந்தடைந்தது.
வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையின் எந்த பகுதியையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை.

அனைத்து பகுதிகளிலும் பல அடி உயரத்துக்கு ஆளையே மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த வெள்ளத்தால் ஒட்டுமொத்த சென்னையுமே தத்தளித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகின்றனர்.
இந்த மக்களை மீட்பது மற்றும் நிவாரணப் பகுதிகளில் முப்படையினரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீட்புப் பணிகளுக்காக கடற்படையின் ஐராவத் போர்க்கப்பல் நேற்று இரவு சென்னை துறைமுகம் வந்தடைந்தது.

மீட்பு பணிகளுக்கான படகுகள், மருத்துவ உபகரணங்களுடன் இப்போர்க்கப்பல் வந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு-புதுச்சேரி கடற்படை அதிகாரி அலோக் பட்நாகர் கூறுகையில், கடற்படைக்கு சொந்தமான ஐராவத் கப்பல் மீட்பு பணிக்கு வந்துள்ளது. அதில் மீட்பு படகுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
Kovilpatti Sattur ViNgr வர விரும்பிணால்.அண்ணாமலை டிரான்ஸ்போர்ட் சார்பாக இலவச பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 9842151207
#CHENNAIRAINS
— MediaExpress (@_MediaExpress) December 3, 2015 தேவையான மருத்துவ உதவிகள் செய்யவும் கடற்படை தயாராக உள்ளது. 7 படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அதன் மூலம் ஏராளமானவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவர் என்றார்.
-
தென்மேற்கு பருவமழை தாமதமாவது ஏன்? புதிய தேதியை அறிவித்த வானிலை மையம்.. அதிகரிக்கும் எல் நினோ அச்சம்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications