ஒரே நாளில் 67 மிமீ .. 6 ஆண்டுகளுக்குப் பின் கோடை மழை பெய்வதில் சென்னை சாதனை!
சென்னை: மார்ச் மாதத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்த நிலையில் அக்னி நட்சத்திர காலமான இப்போது வருணபகவான் கருணை காட்டி வருகிறார். இதனால் வெப்பம் தணிந்து சென்னையில் குளுமை பரவி வருகிறது. சட்டென்று மாறிய வானிலை சென்னைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மே மாதத்தில் இடியும் மின்னலுமாய் பெய்யும் மழையை ரசிப்பது தனி சுகம்தான். சில இடங்களில் ஆலங்கட்டியும் கொட்டும். தமிழகத்தில் கடந்த இரண்டு மாதகாலமாக சதமடித்த வெயில் சற்றே தணிந்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியதையடுத்து பல மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. பாம்பனில் சுமார் 79.6மி.மீ மழையும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 65 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கொட்டும் மழை
ராமநாதபுரம், தஞ்சாவூர், சீர்காழி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமாகவே மழை பதிவாகியுள்ளது. இன்றும், நாளையும் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

சென்னையில் மழை
கடந்த 24 மணி நேரத்தில், திங்கள்கிழமை காலை 8.30முதல் செவ்வாய்க்கிழமை காலை 8.30 வரை சென்னையில் அதிகபட்சமாக 67மி.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 ஆண்டுகளுக்கு பின் கோடை மழை
கடந்த 2010ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி ஒரே நாளில் சுமார் 109.9மி.மீ மழை பதிவானது. அதற்கு பிறகு தற்போது அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. திங்கட்கிழமை இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

டிசம்பர் மாத மழை
சென்னையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது. நூற்றாண்டுகளில் இல்லாத மழையாக 500 மிமீ அளவிற்கு கொட்டி தீர்த்தது. இந்த மழையை சென்னைவாசிகளால் அத்தனை சீக்கிரத்தில் மறக்க முடியாது.

வெள்ளம் சூழ்ந்த சென்னை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்த மழையால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன. இதனால் சென்னை நகரமே வெள்ளக்காடானது. கடந்த 2 மாதகாலமாக வெயில் வாட்டிய நிலையில் கோடை மழையால் சென்னை சாலைகளில் மீண்டும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications