வர்தா புயல்: சென்னை மீனம்பாக்கம்- 18 செமீ; செம்பரம்பாக்கம்- 16 செமீ மழை கொட்டியது! #Vardha
வர்தா புயல் சென்னையில் 3 பகுதிகளாக தாக்கியது. இப்புயலால் சென்னை மீனம்பாக்கத்தில் 18 செமீ மழை கொட்டி தீர்த்துள்ளது.
சென்னை: வர்தா புயலால் சென்னை மீனம்பாக்கத்தில் 18 செ.மீ. மழை கொட்டியுள்ளது. மேலும் சில மணிநேரங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வர்தா புயல் மேற்கு பகுதி, மையப் பகுதி, கிழக்குப் பகுதி என 3 கட்டங்களாக இன்று பகல் முழுவதும் சென்னையைத் தாக்கியது. இப்புயல் கரையை கடந்த போது உச்சகட்டமாக 190 கிமீ வேகத்துக்கும் காற்று வீசியது.

தற்போது வர்தா புயல் முழுமையாக கரையைக் கடந்து வழுவிழக்கத் தொடங்கிவிட்டது. இந்த புயலால் சென்னை நகரில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடியவும் நீடித்தது... பகல் முழுவதும் பேய் காற்றுடன் மிக அதிகமான கனமழை கொட்டித் தீர்த்தது.
கடல் அலைகள் சுனாமி பேரலைகளாக சீறின. கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சென்னை மீனம்பாக்கத்தில் 18 செமீ; செம்பரம்பாக்கத்தில் 16 செ.மீ; நுங்கம்பாக்கத்தில் 14 செமீ மழை பதிவாகி உள்ளன.
கடந்த 1994-ம் ஆண்டு புயலின் போது சென்னை நகரில் ஒரே நாளில் 24 செ.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications