சென்னையில் பின்னணி பாடகி மர்ம மரணம்: போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'எங்கேயும் எப்போதும்', ‘ பறவை' உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ள பின்னணி பாடகி ஷான், சென்னையில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை கைப்பற்றிய போலீஸார், ஷான் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மலையாள திரை உலகில் பிரபல இசையமைப்பாளரான ஜான்சன் மாஸ்டர் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு காலமானார். இவரது மகளான ஷான் (வயது 31) திருமணம் ஆகி கணவரை பிரிந்து சென்னை அசோக் நகரில் வசித்து வந்தார். மயிலாப்பூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து வந்தார். தமிழில் எங்கேயும் எப்போதும் மற்றும் பறவை ஆகிய படங்களில் ஷான் பாடியுள்ளார்.

Chennai: Singer Shan Johnson found dead at home

வியாழக்கிழமை இரவு தன்னுடைய உறவினர்களிடம் ஷான் செல்போனில் நன்றாக பேசியுள்ளார். இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் உறங்க சென்ற அவர், நேற்று மாலை நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை திறந்து பார்த்த போது, ஷான் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடல் முழுவதும் கருப்பு நிறமாக மாறி இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், அவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+