வெள்ளத்தில் சேறும் சகதியுமாக மாறிப்போன சென்னை... இயல்புநிலைக்கு வருவது எப்போது?
சென்னை: சிங்காரச்சென்னை.... எழில்மிகு சென்னை... கிரேட்டர் சென்னை என்று பலவித பெயர்களால் அழைக்கப்பட்ட தமிழகத்தின் தலைநகரமான சென்னை இப்போது சேறும் சகதியுமாக... மலை மலையான குப்பையாக மாறியிருக்கிறது.
வரலாறு காணாத அளவிற்கு பெய்த பெருமழையால் பாதிக்கப்படட சென்னை மாநகரில் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்று என காத்திருக்கின்றனர் பொதுமக்கள்.
டிசம்பர் 2ம் தேதி காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 340 மில்லிமீட்டர் மழை சென்னையில் பெய்துள்ளது. பொதுவாக டிசம்பர் முழுவதிலுமே 250 மிமீ மழைதான் பெய்யும். இதுதான் உண்மை நிலவரம்.

அந்த புதன்கிழமை அதிகாலை
டிசம்பர் 1ம் தேதி செவ்வாய்கிழமை காலை 8.30 தொடங்கி புதன்கிழமை 8.30 மணிவரை காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் மட்டும் 494.20 மி.மீ மழை பெய்து மக்களை நடுங்க வைத்தது. திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 475 மி.மீ மழை பெய்து கதிகலங்க வைத்தது.

அடையாறில் பெருகிய வெள்ளம்
நவம்பர் மாதம் பெய்த மழையில் செம்பரம்பாக்கம் ஏற்கனவே நிரம்பியிருக்க டிசம்பர் 1ம் தேதி பெய்த மழை நீரால் ஏரி உடையாமல் இருக்க அனைத்து நீரும் அப்படியே அடையாறில் திறந்து விடப்பட்டது. இந்த வெள்ளத்துடன் சென்னையில் பெய்த மழை வெள்ளமும் இணைந்து 80000 கனஅடி நீராக பெருக்கெடுத்து சென்னை நகருக்குள் புகுந்து கபளீகரம் செய்தது.

கபளீகரம் செய்த அடையாறு
சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஜாபர்கான்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், கே.கே.நகர் என அத்தனையும் வெள்ளத்தால் சூழப்பட்டது. வெள்ளம் மெல்ல மெல்ல வடிந்து இப்போது காணும் இடமெங்கும் சேறும் சகதியுமாய் குப்பைக்கூழங்களாய் மாறிவிட்டது.

கோட்டூர்புரம் நிலையை என்ன?
வெள்ளம் சூழ்ந்த கோட்டூர்புரத்தில் வெள்ளம் வடிந்த பின்னர் எஞ்சியிருப்பது சேறும் சகதியும், குப்பைகளும்தான். வீடுகளில் இருந்த அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் வீதியில் இறைக்கப்பட்டிருக்கிறது. வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு தவிக்கிறார்கள் அங்கு வசித்தவர்கள்.

உயிர் மட்டுமே மிச்சம்
வெள்ளத்தில் இருந்து தப்பிக்க உயிரை கையில் பிடித்துக்கொண்டு கட்டிய துணியோடு வெளியேறிய மக்கள் வெள்ளம் வடிந்த பின்னர் தாங்கள் வசித்த பகுதிகளுக்கு வந்திருக்கிறார்கள். இதுநாள் வரை வசித்த வீட்டிற்குள் சேற்றை அள்ளி போட்டுவிட்டு போயிருக்கிறது வெள்ளநீர்.

கையேந்தும் மக்கள்
உணவுக்காகவும், குடிநீருக்காகவும், பாலிற்காகவும் மக்களை கையேந்தும் நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது இயற்கை ஆடிய கோரத்தாண்டவம்.

ஜாபர்கான் பேட்டை நிலவரம்
கனமழை வெள்ளத்தில் ஜாஃபர்கான் பேட்டைக்கு அடித்து வரப்பட்டது வெள்ளநீர் மட்டுமல்ல. சேறும் சகதியும்தான். உயிர்களை பறித்துக்கொண்ட மழை, வீட்டில் இருக்கும் பொருட்களையும் உருத் தெரியாமல் குப்பையாக்கியுள்ளது. ஜாஃபர்கான் பேட்டையில் இருக்கும் அனைத்து வீடுகளின் நிலைமையும் இப்படித்தான் உள்ளது.

சேதமடைந்த பொருட்கள்
டிவி, குளிர்சாதனப்பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டிய வீடு சேதமடைந்துள்ளதை விவரிக்க முடியாத வேதனையில் ஆழ்ந்துள்ளனர் மக்கள்.

உபயோகமற்ற குப்பை
மழை வெள்ளத்திற்கு மிஞ்சியப் பொருட்கள் பழுதாகி உள்ளதால் அவற்றை உபயோகிக்க முடியாத நிலையே இருக்கிறது. பொருட்சேதம், நிறைந்துள்ள குப்பைகள் ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது இங்குள்ள மக்களுக்கு.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என இத்தனையையும் மீறி இயல்பு நிலைக்கு வர மக்கள் முயற்சித்தாலும், அவர்கள் அனுபவிக்கும் துயரம் சொல்லில் அடங்காதவையாக இருக்கிறது.

திருவொற்றியூர், கொடுங்கையூரில் கோபாவேசம்
வடசென்னையின் திருவொற்றியூர் சாத்துமா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் முழுவதும் கழிவு நீர் தேங்கியிருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு உணவுப் பொருட்களை கொண்டு வரும் அரசியல் கட்சியினரிடம் எங்களுக்கு தேவை உணவுப் பொருட்கள் அல்ல என மறுப்பதுடன் கழிவு நீரை அகற்றித் தாருங்கள் என்கின்றனர்.
இன்னமும் அப்பகுதியில் கழிவுநீரை அகற்றாமல் அலட்சியமாக அரசு இருந்து வருகிறது.
இதேபோல் வெள்ளம் வடிந்த நிலையிலும் கொடுங்கையூர் பகுதியிலும் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்றாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தங்களது கவுன்சிலரோ, எம்எல்ஏவோ, அரசு அதிகாரிகளோ யாருமே இந்த குப்பையை அகற்ற முன்வரவில்லை என்று குமுறுகின்றனர் கொடுங்கையூர்வாசிகள்.

வெள்ளத்தால் விளைந்த நன்மை
இந்த பெருவெள்ளம் ஒருவகையில் மக்களை ஒன்றிணைத்துள்ளது என்றே சொல்லலாம். வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து தவித்து வருவோருக்கு சக மனிதர்களின் ஆறுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. எனக்கு உயிர் பிழைக்க வேண்டும் அதற்காக என்மீது அக்கறை கொண்டு அழைப்பவரை நம்பி நான் செல்வேன் என்று வேதனையிலும் அந்த பெண் சொன்னது இன்னும் கண்முன்னே நிழலாடுகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications