‘கத்தி' ரிலீசாக இருந்த தியேட்டர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 5 பேர் கைது : சென்னையில் பரபரப்பு
சென்னை:சென்னையில் நடிகர் விஜயின் ‘கத்தி' திரைப்படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது மர்மநபர்கள் சிலர் நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் கத்தி. இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினருடையது எனக் கூறப்படுகிறது. எனவே, இப்படத்தை வெளியிட தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், தீபாவளியன்று கத்தி படம் நிச்சயமாக ரிலீஸ் செய்யப்படும் என லைகா நிறுவனம் அறிவித்தது. அதன்படி, நாளை அப்படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் கத்தி படம் வெளியாக இருந்த இரு திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சென்னை...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டரில் கத்தி படத்திற்காக டிக்கெட் முன்பதிவு நேற்றிரவு 11.30 மணியளவில் தொடங்கியது.

பெட்ரோல் குண்டுகள்...
அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் தியேட்டர் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்தெறிந்து, திரைப்படத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் தியேட்டர் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஓடினர்.

சேதம்...
இதில் தியேட்டர் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. தியேட்டர் ஊழியர்கள் போராடித் தீயை அணைத்தனர்.

விசாரணை...
தாக்குதல் சம்பவத்தில் 30க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியவர்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதல்...
இதே போல், கத்தி படம் வெளியாக உள்ள சென்னை உட்லேண்ட்ஸ் தியேட்டரிலும் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தகைய தாக்குதல் சம்பவங்களால் கத்தி படம் வெளியாவதில் மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கைது...
தற்போது இத்தாக்குதல் தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யார், ஏன் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி











Click it and Unblock the Notifications