இது லிஸ்ட்லயே இல்லையே! மறந்தும் இந்த தப்பு செஞ்சுறாதீங்க.. சென்னை போலீஸ் செய்ற வேலையை பாத்தீங்களா!
சென்னை: சென்னை மாநகராட்சியில் வசிக்கும் மக்களே போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்றுங்கள், போக்குவரத்து விதிகளை மீறி சென்றால் கண்டிப்பாக அபராதம் விதிக்கிறது சென்னை போலீஸ்.
போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் குறித்து யாரேனும் ஆதாரத்துடன் வீடியோ அல்லது புகைப்படம் அனுப்பினால் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அபராதம் விதிக்கிறது.

என்ன கேட்கும் போதே ஆச்சர்யமாக இருக்கிறதா, கடந்த சில நாட்களாக இந்த விஷயம் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்பவர்கள், போக்குவரத்து டிராபிக் கோடுகளை கடந்து நிற்பவர்கள், ஒரு வழி பாதையில் செல்பவர்கள் என பலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
பூர் இந்தியன் என்பவர் கடந்த ஏப்ரல் 16ம் தேதி சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து, அண்ணா நகர் கே4 சிக்னலில் ஹெல்மெட் இல்லாமல் நிற்பதாகவும், ஸ்டாப் லைனை தாண்டி நிற்பதாகவும் புகார் கூறியிருந்தார். இதை ஆராய்ந்த சென்னை போக்குவரத்து காவல்துறை, இவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என்று பதில் அளித்துள்ளோம்.
இது ஒரு சம்பவம் மட்டுமல்ல, இன்னும் சில சம்பவங்களையும் கூறலாம். கட்டதுரை என்பவர் சென்னை வடபழனி லட்சுமன் ஸ்ருதியில் ஸ்டாப் லைனை தாண்டி சிக்னலில் நிற்பது குறித்து புகைப்படத்தை இன்று சென்னை மாநகர போலீஸை டேக் செய்து நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். அதற்கு போலீசார், நோட் பண்ணிக்கிட்டோம். உங்கள் தகவலுக்கு நன்றி என பதில் அனுப்பி உள்ளனர்.
கவின்குமார் என்பவர் பார்க்க முடியாத வகையில் ஓஎம்ஆர் சாலையில் நம்பர் பிளேட் இருந்ததாக கூறினார். அதற்கு டிராபிக் போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்துள்ளனர். இதேபோல் அமோஸ் தேவந்திரகுமார் என்பவர் தனது டுவிட்டரில் பெருங்குடியில் ஏப்ரல் 18ம் தேதி ஒரு காரில் பார்க்க முடியாத வகையில் நம்பர் பிளேட் இருப்பதாக புகார் கூறியிருந்தார். இதற்கும் டிராபிக் போலீஸ் பதில் அளித்துள்ளது.

Defective no plate உள்ள வாகனங்கள் பலவற்றின் புகைப்படங்களை நெட்டிசன்கள் தினமும் எடுத்து அனுப்புகிறார்கள். அவை அனைத்திற்கும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. டிராபிக் சின்லை மீறி சென்றாலோ, போலீஸ் இல்லையே என்று ஹெல்மெட் போடாமலோ சென்றால் கண்டிப்பாக அபராதம் தான் உங்களுக்கு போடப்படும்.
சென்னையில் கிட்டத்தட்ட எல்லா சிக்னலிலும் கேமரா இருக்கிறது. போலீசார் எங்கு போக்குவரத்து விதிகளை மீறி இருந்தாலும் எளிதாக கண்காணித்து அபராதம் விதிக்க முடியும். போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் குறித்து சென்னை டிராபிக்போலீஸை டேக் செய்து யார் புகார் கொடுத்தாலும் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே மக்களே தயவு செய்து டிராபிக் விதிகளை மீறி விடாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் வீடு தேடி நோட்டீஸ் வரும். போக்குவரத்து விதிகளை கடைபிடிப்போம். ஒத்துழைப்போம். நன்றி.












Click it and Unblock the Notifications