For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்.. சிங்கப்பெருமாள் கோவிலில் 2 அடிக்கு மழை நீர்.. டிராபிக் ஜாம்!

சிங்கப்பெருமாள் கோவிலில் அமைந்துள்ள சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 அடிக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் இரவில் மட்டும் மழை பெய்ய காரணம் என்ன?-வீடியோ

    சிங்கப்பெருமாள் கோயில் : சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 அடிக்கு மேல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சிங்கப்பெருமாள் கோவிலில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அந்தப் பகுதியில் உள்ள சுமார் 98க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. இதனால் மீண்டும் மழை பெய்தால் ஏரியில் இருந்து நீரை வெளியேற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

    Chennai Trichy highway road blocked with rain water transport affected.

    இந்நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் 2 அடி அளவிற்கு மழைநீர் ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு. தெல்லிமேடு ஏரிக்கரை உடைந்ததால் 2 நாட்களாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

    தென்மேலப்பாக்கம், சிங்கப்பெருமாள் கோயில் ஏரிகளும் நிரம்பி வழிவதால் சாலையை கடந்து ஓடும் நீர்மட்டம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே இந்த சாலையை பயன்படுத்துவோர் எச்சரிக்கையோடு இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    English summary
    Chennai Trichy highway at Singaperumal koil road blocked with rain water, as the surplus water is draining from Thellumedu lake. Due to this transport affected on this area.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X