சென்னையில் வீட்டில் விபச்சாரம்.. 2 ஆந்திரப் பெண்கள் மீட்பு.. 2 புரோக்கர்கள் கைது
சென்னை: சென்னையில் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்ட இரண்டு ஆந்திர பெண்களைப் போலீசார் மீட்டனர். இப்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு தரகர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள வீடொன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து வேலு நகரில் உள்ள ஒரு வீட்டில், விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், சம்பந்தப்பட்ட வீட்டில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த வீட்டில் இருந்து இரண்டு ஆந்திர பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். அப்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக ரவி என்கிற ஹெல்மட் பாண்டியன் (46) மற்றும், செந்தில் (46) ஆகிய இரண்டு புரோக்கர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் ரவி ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியில் வந்தவர் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications