சென்னையில் மழை எப்படி இருக்கும்? என்ன சொல்கிறது நார்வே நாட்டு வானிலை மையம்?
சென்னையில் நாளை மாலை வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நார்வே நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: நாளை மாலை வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நார்வே நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் ஓகி புயலாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் ஓகி புயல் உருவாகியுள்ளது. புதிதாக உருவான ஓகி புயலால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யுக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் கனமழை
தென் தமிழகத்தில் கடலோர பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஓகி புயல் உருவாகியுள்ளதை அடுத்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தஞ்சை,திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி லேசான மழைதான்
சென்னையில் நேற்றிவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.இந்நிலையில் சென்னையில் இன்றைய பொழுதுக்கு இனி விட்டு விட்டு லேசான மழைதான் பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலையில் கனமழை பெய்யும்
அதேநேரத்தில் நள்ளிரவுக்கு மேல் நாளை மாலை வரை அவ்வப்போது கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் நார்வே நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது.குறிப்பாக நாளை அதிகாலை சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது.

தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும்
இந்த மழை நாளை பகல் வரை இடைவெளி விட்டு மழை நீடிக்கும் என்றும் நார்வே நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோல் கோவை , மதுரை, திருச்சி உட்பட தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் என்றும் நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications