சென்னையில் இன்று மழை எப்படி இருக்கும்? நார்வே வானிலை மையம் அறிவிப்பு!
சென்னையில் இன்று அச்சப்படும் அளவுக்கு மழை இருக்காது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: இன்று அச்சப்படும் அளவுக்கு மழை இருக்காது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. பிற்பகலில் சாரல் மழை தீவிரமடையும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
காவிரி டெல்டா பகுதியில் கொட்டிய கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

நேற்று பிற்பகலில் மழை
சென்னையில் நேற்று பிற்பகலுக்குப் பிறகு நேற்று மாலை வரை கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.

இரவு முதல் மழையில்லை
ஆனால் நேற்றிரவு சென்னையில் மழை ஓய்ந்திருந்தது. பல இடங்களில் தேங்கி நின்ற மழை நீர் வடிந்துள்ளது.

அச்சப்படும் அளவுக்கு இருக்காது
இந்நிலையில் சென்னையில் இன்று பல இடங்களில் லேசான சாரல் மழை தான் இருக்கும் என நார்வே வானிலை மையம் கூறியுள்ளது. அச்சப்படும் அளவுக்கு மழை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதமான மழை
அதேநேரத்தில் பிற்பகலில் பல இடங்களில் கனத்த சாரல் மழை இருக்கும் என்றும் நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மிதமான மழையாக கூட மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சாரல் மழை நீடிக்கும்
இரவிலும் சாரல், தூறல் தொடரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. நார்வே நாட்டின் வானிலை மைய கணிப்புகள் துல்லியமாக இருப்பதால் மக்களின் நம்பிக்கையை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications