சிங்கப்பூரில் சென்னை பெண் மரணம்- 15வது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்யப்பட்டதாக புகார்!
சென்னை: சென்னையைச் சேர்ந்த திருமணமான பட்டதாரி பெண் ஒருவர் சிங்கப்பூரில் 15 ஆவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் அதிர்ச்சிகரமான புகாரை அளித்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி சுங்குவார் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இவரது மனைவி பெயர் உஷா. நேற்று காலையில் சீனிவாசன் தனது மனைவி உஷாவுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். உஷா கதறி அழுதபடி இருந்தார். இருவரும் சேர்ந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

அந்தப் புகாரில், "எங்கள் மகள் பெயர் தீபிகா. எம்.பி.ஏ. பட்டதாரி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூபாய் 20 லட்சம் பணம் செலவு செய்து சிங்கப்பூரில் வேலை பார்க்கும் பொறியியல் பட்டதாரியான மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்தோம். திருமணத்திற்கு பிறகு எனது மகள் கணவரோடு சிங்கப்பூர் சென்று விட்டாள். தற்போது அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.
எனது மகளின் மாமனார், மாமியார் வரதட்சணை கொடுமை புரிந்தனர். மேலும் ரூபாய் 15 லட்சம் பணம் கேட்டு சித்ரவதை செய்தனர். எங்கள் மகள் போன் செய்து எங்களுக்கு இந்த தகவலை தெரிவித்தாள். இந்த நிலையில், எங்களது மகள் தீபிகா சிங்கப்பூரில் 15 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக அவளது கணவர் போனில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த செய்தி கேட்டு நாங்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
அவளை 15 ஆவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்திருப்பார்கள் என்று அஞ்சுகிறோம். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி எனது மகளின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications