சாப்பிட்டுவிட்டு கைகழுவியபோது கணவன் கண்முன்பு ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
கோவை: கோவையில் ஓடும் ரயிலில் சாப்பிட்டுவிட்டு கை கழுவிக் கொண்டிருக்கையில் தவறி கீழே விழுந்த பெண் பலியானார்.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர்கள் ஜெய்சங்கர்(50), அவருடைய மனைவி சுமதி(45). அவர்கள் பாலக்காடு செல்ல சென்னையில் இருந்து கிளம்பிய வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினர்.
ரயில் நேற்று முன்தினம் காலை 8.40 மணி அளவில் கோவை ரயில் நிலையத்தை அடைந்துவிட்டு அங்கிருந்து கிளம்பியது. காலை உணவை சாப்பிட்ட கணவனும், மனைவியும் கை கழுவ வாஷ்பேசினுக்கு சென்றனர்.

கதவுக்கு அருகே இருந்த வாஷ்பேசினில் சுமதி கை கழுவிக் கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் ஜெய்சங்கர் நின்று கொண்டிருந்தார். அந்த பெட்டியின் கதவு திறந்து கிடந்தது. இந்நிலையில் சுமதி தவறி ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதை பார்த்த ஜெய்சங்கர் அதிரிச்சி அடைந்து அழுதார். ரயிலை நிறுத்த முடியாமல் அங்கு இங்கும் அழுதபடி அலைந்தார்.
இந்நிலையில் ரயில் பாலக்காட்டை அடைந்தது. உடனே அவர் பாலக்காட்டில் இருந்து டாக்சி மூலம் கோவை வந்து போத்தனூர் ரயில் நிலைய போலீசாரிடம் நடந்தது பற்றி தெரிவித்தார். போலீசார் சுமதியை தேடியபோது ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரிக்கு பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் அவர் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது உடலை மீட்ட போலீசார் அதை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications