விபத்தில் மூளைச்சாவு அடைந்த வெல்டிங் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்
சென்னை: விபத்தில் மூளைச் சாவு அடைந்த வெல்டிங் வேலை செய்பவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(40). வெல்டிங் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி லட்சுமி. அவர்களுக்கு 9 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
கிருஷ்ணமூர்த்தியின் உறவினர் ஒருவர் கடந்த 22ம் தேதி மரணம் அடைந்தார். துக்க வீட்டுக்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இறுதி ஊர்வலம் தங்கசாலை பார்த்த சாரதி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஷேர் ஆட்டோ ஒன்று தாறுமாறாக வந்து ஊர்வலத்தில் புகுந்தது. ஆட்டோ புகுந்ததில் கிருஷ்ணமூர்த்தி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனே ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் கிருஷ்ணமூர்த்திக்கு வியாழக்கிழமை இரவு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி முன்வந்தார். அதன்படி கிருஷ்ணமூர்த்தியின் இதயம், சிறுநீரகம், கண்கள் உள்பட 5 உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
இதற்கிடையே குடிபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பாபு கைது செய்யப்பட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications