வாழும் இதயங்கள் - மூளைச் சாவடைந்த சென்னை பெண்ணின் இதயம் தானம்
சென்னை: சென்னையில் மூளைச்சாவடைந்த பெண் ஒருவரின் இதயம் தானமாக அளிக்கப்பட்டது.
சென்னை பாடியை சேர்ந்தவர் ஷீபா என்ற திருமணமான பெண்மணி.
பழைய மகாபலிபுரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஷிப்பிங் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
இரு சக்கர வாகனம் மோதல்:
ஷீபா நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் அசோக் பில்லரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் மோதியதில் ஷீபா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
உயிருக்கு போராடிய ஷீபா:
இதனால் தலையில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடிய அவரை அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராமாபுரம் மியாட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மூளைச்சாவு நிலை:
கோமா நிலையில் இருந்த ஷீபாவுக்கு நேற்று மாலையில் மூளைச்சாவு ஏற்பட்டது. இதுபற்றி அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஷீபாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
உடல் உறுப்புகள் தானம்:
உடனடியாக முகப்பேர் மருத்துவமனை மற்றும் மியாட் மருத்துவமனை மருத்துவ குழுவினர் ஷீபாவின் உடல் உறுப்புகளை பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதயமும் தானம்:
இதயம், 2 சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவற்றை பிரித்து எடுத்தனர். நள்ளிரவு 12 மணியளவில் இதயத்தை கொண்டு செல்ல தயாரானார்கள்.
முகப்பேரில் அறுவைசிகிச்சை:
போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்பட்டு முகப்பேர் வந்தடைந்து உடனடியாக தயாராக இருந்த மருத்துவ குழுவினர் அந்த இதயத்தை இன்னொரு நோயாளிக்கு பொருத்தினார்கள்.
சிறுநீரகங்களும் தானம்:
ஒரு சிறுநீரகமும், கல்லீரலும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
6 பேரின் புது வாழ்வு:
இரண்டு கண்களும் சங்கரநேத்ராலயா கண் மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டது.பலியான ஷீபாவின் உடல் உறுப்புகள் மூலம் 6 பேர் புதுவாழ்வு பெற்றுள்ளார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications