சென்னை வெள்ளம்: தாயின் சடலத்துடன் 20 மணிநேரமாக போராடும் இளம்பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை வெள்ளம் சென்னை மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ள நிலையில் மரணத்திற்கு பிறகும் சிரமத்தில் சிக்கியுள்ளார் ஒருவயதான தாய். 20 மணிநேரமாக தாயின் சடலத்தை வைத்துக்கொண்டு தவித்து வருகிறார் ஒரு இளம்பெண்.

அடையாறு ஆற்றில் இருந்து வெளியேறிய கட்டுக்கடங்காத சைதாபேட்டையை கபளீகரம் செய்தது. தொடர்ந்து அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கே.கேநகரை சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த காரணத்தால் 48 மணிநேரத்திற்கும் மேலாக அங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு முழவதும் இருளில் அந்த பெண் தன்னந்தனியே தனது தாயின் சடலத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இடுப்பு அளவு சூழ்ந்திருக்கும் மழை நீர் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் ஆம்புலன்ஸ் அல்லது அமரர் ஊர்தி வாகனமோ வரமுடியாத நிலை ஏற்பட்டது. தனது தாயின் சடலத்தை சவக்கிடங்குக்கு எடுத்துச் செல்ல அந்த பெண் முயற்சி செய்தும் சாலைகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்திருப்பதாலும் சாலைகள் மூடப்பட்டிருப்பதாலும் மீண்டும் தனது தாயின் சடலத்துடன் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

சடலத்துடன் போராடி வரும் அந்த இளம்பெண்ணிற்கு உதவி செய்யவேண்டும் என்று அவரது தோழி ஊடகங்களின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+