சாப்பாடு விலை ரூ.60... சாம்பார் விலை ரூ.70 ... இது என்ன கூத்து?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடைகளில் ஒரு கிலோ சிக்கன் ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் துவரம் பருப்பின் விலை ஒரு கிலோ 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிக்கன் விலையை விட பருப்புகளின் விலை உயர்வு நடுத்தர, ஏழை மக்களை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்த விலை உயர்வுக்கும் அசராத டுவிட்டர்வாசிகள் பருப்பு விலை உயர்வுக்கு பதறிக்கொண்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். காரணம் இல்லாமல் இல்லை. ஹோட்டல்களில் சாம்பாருக்கு தனி ரேட் வைத்து விடுவார்களோ என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். கிண்டல் பதிவுகளுக்கு மோடி, சரத்குமார் என ஒருவரும் தப்பவில்லை.

dalprice

மோடிக்கு டூர் தால்

துவரம் பருப்பு விலை உயர்வைப் பற்றி கவலைப்படாமல் டூர் போவதிலேயே கவனம் செலுத்துகிறார் மோடி என்பதை உணர்த்தும் வகையில் 'டூர் தால்' தான் மோடிக்கு பிடித்தது என்று பதிவிட்டுள்ளனர்

அறிக்கை போர்

பருப்பு விலை உயர்வுக்கு ஆளும் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்கட்சிகளின் அறிக்கைகள் குடைச்சலை தருகிறது. அதே நேரத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான அறிக்கைகளும்

வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த பருப்பு விலை உயர்வு சமூக வலைத்தளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

130 ரூபா பில்லா?

சாம்பாருக்கு தனி ரேட் வைக்கலாமா, உணவுப் பொருட்களில் விலையை உயர்த்தலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கின்றனர் ஹோட்டல் முதலாளிகள் அவ்வாறு உயர்த்தப்பட்டால், சாதாரண

ஹோட்டல்களில் கூட இனி மீல்ஸ் விலை 130 ரூபாய்க்குத்தான் வாங்கவேண்டும் போலிருக்கிறது.

பழி போடுங்க நாட்டாமை

பருப்பு விலை உயர்வுக்கு, அரசுக்கு ஆதரவாக அறிக்கை விட்டாலும் விட்டார், அவரை அடித்து ஆடுகின்றனர் வலைஞர்கள். பழியை தூக்கி பாண்டவர் அணி மேல போடுங்க என்கின்றனர்.

பான் கார்டு

பருப்பு விலை உயர்வு பதம் பார்ப்பது ஒரு புறம் இருக்க, இனி பருப்பு வாங்கினா கூட பான் கார்டு கேட்பாங்களோ என்கின்றனர்.

ராகுல்காந்தியின் கவலை

அசைவ உணவாக சிக்கன் விலையை விட பருப்பு விலை விற்கிறதே என்று ஆதங்கத்துடன் கேட்டுள்ளார் எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+