சிதம்பரம் லோக்சபா தொகுதி: திருமாவளவனுக்கு 3-வது வெற்றி கிடைக்குமா? மிரட்டுதே அதிமுக வாக்கு வங்கி!
சிதம்பரம்: ஆன்மீக தலமான சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 6-வது முறையாக களம் காண்கிறார். ஏற்கனவே 2 முறை வென்ற திருமாவளவன், 3-வது வெற்றிக்காக போராடுகிறார்.
சிதம்பரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: குன்னம்,
அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி). இத்தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வென்றுள்ளது. திமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 3 முறை, அதிமுக 2 முறை, விசிக 2 முறை வென்றுள்ளது.

சிதம்பரம் தொகுதி வாக்காளர்கள்: 15,10,915; ஆண்கள்- 7,49,623; பெண்கள்- 7,61,206; 3-ம் பாலினத்தவர் 86
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
தொல். திருமாவளவன்(விசிக) 4,28,804
பொன்னுசாமி(பாமக) 3,29,721
சசிகுமார்(தேமுதிக) 66,283
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
சந்திரகாசி(அதிமுக) 4,29,536
திருமாவளவன்(விசிக) 3,01,041
சுதா(பாமக) 2,79,016
வள்ளல் பெருமான்(காங்கிரஸ்) 28,988
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
திருமாவளவன்(விசிக) 5,00,229
சந்திரசேகர்(அதிமுக) 4,97,010
இளவரசன் (அமமுக) 62,308
சிவஜோதி(நாம் தமிழர் கட்சி) 37,471
2024-ல் களம் காணும் வேட்பாளர்கள்
திருமாவளவன் (விசிக)
சந்திரகாசன் (அதிமுக)
கார்த்தியாயினி (பாஜக)
ஜான்சி ராணி (நாம் தமிழர் கட்சி)
சிதம்பரம் கள நிலவரம் என்ன?: கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களின் தொகுதிகளை உள்ளடக்கியது சிதம்பரம். இத்தொகுதியில் 35% வன்னியர்கள்; தலித்துகள் 31%. மூப்பனார், உடையார், முதலியார், ரெட்டியார், பிள்ளைமார், யாதவ்களும் உள்ளனர். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மொத்தம் 6% உள்ளனர். சிதம்பரம் லோக்சபா தொகுதியில் 6-வது முறையாக களம் காண்கிறார் ஏற்கனவே 2 முறை வென்ற தொல். திருமாவளவன். திமுகவின் வாக்கு பலத்தை முழுமையாக நம்புகிறார் திருமாவளவன். அதிமுக வலிமையான வாக்கு வங்கியை வைத்திருக்கிறது. பாமகவை நம்புகிறது பாஜக. கொள்ளிடம் தடுப்பணை, முந்திரி தொழிற்சாலை ஆகியவை நீண்டகால பிரச்சனை. சிதம்பரம், காட்டுமன்னார் கோவிலில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை தேவை என்பதும் தொடர் கோரிக்கை. சிதம்பரத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பதும் நீண்டகாலமாக வலியுறுத்தப்படும் கோரிக்கைதான். பல்வேறு ரயில் திட்டங்களையும் எதிர்பார்க்கின்றனர் தொகுதி மக்கள்.












Click it and Unblock the Notifications