சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்ற நீதிபதிகள் தயக்கம்- தலைமை நீதிபதி அகர்வால் பேச்சு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ராஜேஷ்குமார் அக்ரவால் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால் பேசியதாவது:
கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி இந்த புகழ் பெற்ற உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றேன். அப்போது, என்னை பாராட்டி வரவேற்பு கொடுத்தீர்கள். நான் இந்த நீதிமன்றத்தில் ஒரு அங்கம் என்று முடிவு செய்து பணியை தொடங்கினேன்.
ஆனால், திடீரென ஒரு நாள் காலையில், வழக்கறிஞர்கள் ஒரு சிலர் என்னை வெளிநபராக நடத்துகின்றனர் என்று உணர்ந்தேன். இதனால், நான் கடுமையான மனவேதனை அடைந்தேன். எதற்காக அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்று ஆராய்ந்தும், காரணத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன், உங்களாலும் கண்டறிய முடியாது.
எனவே எனக்கு அந்த காரணத்தை நீங்கள் தெரியப்படுத்துங்கள். அதன்மூலம், நான் என்னை திருத்திக்கொள்கிறேன்.
அண்மையில் எனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு நாள் என்னுடன் பணியாற்றும் சக நீதிபதி ஒருவர், என் மீது கடும் சொற்களை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், இந்த உயர்நீதிமன்றத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தினார்.
இந்த உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பல நீதிபதிகள் வேறு மாநில உயர்நீதிமன்றங்களுக்கு தங்களை பணிமாற்றம் செய்யும்படி என்னிடம் கேட்டனர். அதேபோல, வெளிமாநிலத்தில் பணியாற்றும் நீதிபதிகள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்ற தயக்கம் காட்டுகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்பையும், கவுரவத்தையும் நாம் ஒன்றிணைந்து கடுமையாக உழைத்து, மீண்டும் நிலைநிறுத்த நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும்.
இவ்வாறு தலைமை நீதிபதி அகர்வால் பேசினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications