சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை: இந்திரா பானர்ஜி உறுதி
சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி சமூக செயல்பாட்டாளர் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

மனுவில் குழந்தைகள் நலக்குழுவில் போதிய உறுப்பினர்கள் இல்லை என்றும் போதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன்பு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, நீதிபதி இந்திராபானர்ஜி கூறியதாவது, சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை வழங்கப்படும். அனைத்து பாலியல் பலாத்கார வழக்குகளும் விரைந்து விசாரிக்கப்படும். நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் பலாத்கார வழக்குகளில் நீதி நிலைநாட்டப்படும் என்று தெரிவித்தார்.
அதேபோல, டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டனர். இது போன்ற சம்பவங்கள் உயர் நீதிமன்றத்தில் வன்முறையைத் தூண்டுவதற்கு காரணமாகிவிடக் கூடாது. அதனால், நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இது குறித்து பரிசீலிப்பதாகக் கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications