புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ. 4,047 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் எடப்பாடியார் கோரிக்கை!
புயல் பாதிப்பு நிவாரண நிதியாக 4,047 கோடி ரூபாய் தேவை என பிரிதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி: புயல் பாதிப்பு நிவாரண நிதியாக 4,047 கோடி ரூபாய் தேவை என பிரிதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தை நெருங்கிய ஓகி புயல் அம்மாவட்டத்தை புரட்டிப்போட்டது. இந்நிலையில் ஓகி புயலால் பாதிப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு நடத்தி வருகிறார்.
இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிடோர் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனர்.

பாதிப்பு குறித்து..
கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடியை அவர்கள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

மோடி தலைமையில் கூட்டம்
ஓகி புயல் பாதிப்பு குறித்து கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பிரதமர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பிரதமரிடம் மனு
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புயல் பாதிப்பு குறித்து விளக்கினார். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்கவேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை மனு அளித்தார்.

ரூ.4047 கோடி தேவை
ஓகி புயல் சூறையாடிய பகுதிகளின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 4,047 கோடி ரூபாய் பாதிப்பு நிவாரண நிதி தேவை என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குடும்பத்தினரை பிரதமர் மோடி சந்திப்பார் என கூறப்படுகிறது.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications