கருணாநிதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்காத முதல்வர் எடப்பாடியார்.. அமைச்சர் ஜெயக்குமாரை அனுப்பினார்
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லை.
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் இன்று மாலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே முப்படை வீரர்களின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது இறுதிச்சடங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர் தேவ கவுடா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை. ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் பங்கேற்றார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவர். 13 முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தான் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் கருணாநிதி தோல்வியை சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications