நான் ராஜினாமா செய்கிறேன்.. ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார் ஓ.பன்னீர் செல்வம்
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வரும் பதவியை ராஜினாமா செய்தார்.
சென்னை: அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் விரையில் முதல்வராக பதவியேற்கவுள்ளார். நாளை அல்லது 9ஆம் தேதி சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தனது விலகல் கடிதத்தை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஓ.பன்னீர் செல்வம் அனுப்பி வைத்துள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவதாக அவர் கூறியுள்ளார்.
நான் ராஜினாமா செய்கிறேன்.. ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார் ஓ.பன்னீர் செல்வம் pic.twitter.com/d50bs2I3kC
— Oneindia Tamil (@thatsTamil) February 5, 2017
அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. நிதி அமைச்சர் பதவி மாஃபா பண்டியராஜனுக்கு வழங்கப்படும் என்றும் செங்கோட்டையனுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியும் ஆட்சியும் ஓரே நபரிடம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications