தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 14 ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யப்படும் போது, அவர்களது படகுகளை இலங்கை அரசு விடுவிப்பது இல்லை. அந்த வகையில், தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 50 படகுகள், இலங்கை கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை உடனடியாக அவர்களிடம் திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீண்ட நாட்களாக அந்த படகுகள் கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டிருப்பதால், பழுதடைந்து, சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இவ்விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு, தூதரக அதிகாரிகள் மூலம், 14 மீனவர்களையும், அவர்களுக்குச் சொந்தமான 50 படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications