தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது குழந்தை பரிதாப பலி!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது.
முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் - ஜகதீஸ்வரி தம்பதியின் மகனான கவின் வீட்டு வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது நிலத்தடி தண்ணீர் தொட்டி சரியாக மூடாமல் இருந்ததால் தொட்டிக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் காணாததால் குழந்தையைத் தேடிய ஜகதீஸ்வரி, பின்னர் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கவினை தொட்டியில் இருந்து மீட்டார்.
கவினைத் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்ற போது கவின் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைச் செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications